அங்கன்வாடி மையங்களில், 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டு வந்ததை, இனிமேல் 3 முட்டைகளாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய முதல்வர், “எந்த திட்டமாக இருந்தாலும் கடைக்கோடி மக்களை சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் தமிழகத்தில் பொது விநியோக திட்டத்துடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ் மேலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு சத்துக்கள் அடங்கிய செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்படும். அங்கன்வாடி மையங்களில் ஒன்று முதல் இரண்டு வயது வரையிலான குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை வழங்கப்பட்டு வந்ததை, இனிமேல் 3 முட்டைகளாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது”என்று கூறினார்.