மக்களே முக்கிய அறிவிப்பு ..!! ஆதாருடன் பான் கார்டு இணைக்க கடைசி தேதி இதுவே…

பான் கார்டுதாரர்கள் மார்ச் 31, 2022க்குள், ஆதார் கார்டுடன் இணைக்கத் தவறினால் ரூ. 1000 வரை அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரித்து இருந்தது. இருப்பினும், கால வரம்பு நீட்டித்து வழங்கப்பட்டது. 2023, மார்ச் வரை பான் கார்டை ஆதாருடன் இணைக்க அவகாசம் வழங்கப்பட்டது.

ஜூலை 1, 2017-ன் படி பான் கார்டு வழங்கப்பட்டு, ஆதார் எண்ணைப் பெறத் தகுதியுடையவர்கள், 31 மார்ச் 2022 அன்று அல்லது அதற்கு முன் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரியிடம் ஆதார் குறித்து தெரிவிக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் தெரிவித்து இருந்தது. அவ்வாறு செய்யத் தவறினால், அவரது பான் கார்டு செயலிழந்துவிடும் மற்றும் பான் கார்டு தேவைப்படும் இடங்களில் அனைத்து நடைமுறைகளும் நிறுத்தப்படும். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைச் குறிப்பிட்ட அதிகாரிகளிடம் செலுத்திய பின்னர், பான் எண்ணை மீண்டும் செயல்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழப்பு செய்யப்படும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இதற்கான கால வரம்பாக 31 மார்ச் 2023 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டையும் இணைக்க வேண்டும் என்று அரசு பல ஆண்டுகளாக சொல்லி வருகிறது. இந்நிலையில் தற்போது செயலிழப்பு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆதாருடன் பான் கார்டு இணைப்பதற்கு, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள், இந்திய குடியுரிமை இல்லாதவர்கள், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், அசாம், மேகாலயா, ஜம்மு காஷ்மீர் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.