காயத்ரி vs திருச்சி சூர்யா: ஆபாசமா பேசனதுக்கு விசாரணை; அத கேட்டதுக்கு நீக்கமா? நைஷ் பாஜக!

தமிழகத்தில் இன்று காலை முதல் காயத்ரி ரகுராம், திருச்சி சூர்யா விஷயம் தான் காரசாரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதில் ஒருவர் கட்சியில் இருந்து 6 மாத காலம் இடைநீக்கம் செய்யப்பட்டு விட்டார். மற்றொருவர் மீது விசாரணை நடத்தி 7 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் கட்சி தலைமை மீது மறைமுகமாக விமர்சனங்களை முன்வைத்து வந்தார் காயத்ரி ரகுராம்.

பதவி, அதிருப்தி, கலகக்குரல் என விஷயம் விஸ்வரூபம் எடுத்தது. இன்று காலை கூட திருச்சி சூர்யா மாநில பெண் பாஜக நிர்வாகி ஒருவருடன் பேசும் ஆடியோவை வெளியிட்டு கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அதிலும் பாஜகவை யாரும் குறை சொல்லிவிடக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அப்படியே திமுக பக்கம் திருப்பி விட்டு திராவிட மாடலை வம்புக்கு இழுத்தார்.

திமுக ஸ்லீப்பர் செல்கள் தான் நம்மை சேதப்படுத்துகின்றன. அந்த நபர்களை போலீசார் கைது செய்ய வேண்டும். கட்சி அவரை உடனடியாக நீக்க வேண்டும் என்று திருச்சி சூர்யா மீது காட்டமாக பதிவிட்டிருந்தார். ஆனால் அப்படியே உல்ட்டாவாக நடந்திருக்கிறது. காயத்ரி ரகுராம் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆபாசமாக பேசிய திருச்சி சூர்யா மீது விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க மாநிலத் தலைவர் அண்ணாமலை உத்தரவிட்டுள்ளார்.

இந்த விஷயம் தான் சமூக வலைதளங்களில் காரசார விவாதப் பொருளாக மாறியுள்ளது. குறிப்பாக ட்விட்டரில் பாஜக குறித்து விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. அதாவது, ”ஆபாசமா பேசினதுக்கு நடவடிக்கை இல்ல. அதை கேட்டதுக்கு நடவடிக்கை. நைஷ்!” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். கட்சிக்குள்ளேயே பெண்ணிடம் ஆபாசமாகப் பேசும் ஆணை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

அதை விமர்சிக்கும் பெண் கட்சியில் இருந்து இடை நீக்கமா? ஏற்கனவே காயத்ரி ரகுராம் மீது கட்சி தலைமை அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டாலும் இது சரியா? என்று மற்றொருவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கிடையில் ஒருவர் திருச்சி சூர்யா விரைவில் கைது செய்யப்படலாம் என கொளுத்திப் போட்டுள்ளார். ஆடியோவை ஆதாரமாக எடுத்து கைது செய்ய முடியாதா? கட்சியை விடுங்க. ஒரு பெண்ணை இப்படி பேசுவது எந்த விதத்தில் நியாயம் என சரமாரி கேள்விகள் வந்து குவிகின்றன.

மேலும் ஒருவர் அண்ணாமலையை கண்டித்து வானதி சீனிவாசன், குஷ்பு சுந்தர் ஆகியோர் அறிக்கை விடுவார்களா? என்று வில்லங்க கேள்வியை கேட்டிருக்கிறார். திருச்சி சூர்யா விஷயம் குறித்து கேள்வி கேட்டதற்காக காயத்ரி ரகுராம் இடைநீக்கம் செய்யப்படவில்லை. அவர் பாஜக மாநில தொழிற்பிரிவின் துணை தலைவர் செல்வக்குமாருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். அதன் விளைவு தான் இப்படி நடந்திருக்கிறது என்று விளக்கம் கொடுத்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.