உதகை: உதகை கொடைக்கானலில் கடுமையாக குளிர் நிலவி வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. உதகையில் உறை பனி காலம் தொடங்கியதை அடுத்து கடும் குளிர் நிலவி வருகிறது. உதகை வாகங்கள் மீது பனி படர்ந்திருந்தன. 5 டிகிரி வரை செல்சியஸ் குறைந்ததால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர்.
கொடைக்கானலில் கடந்த ஒரு வாரம் காலமாக பகல் நேரத்தில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் வழக்கமாக இருப்பதை விட வெப்பம் அதிகமாகவும் இரவு நேரத்தில் கடும் குளிரும் நிலவி வந்தது. நேற்று முதல் இந்த நிலை மாறி பகல் நேரத்தில் கடுமையான குளிர் நிலவியது.
சுற்றுலா பகுதிகளில் பனிப்பொழிவு காணப்படுகிறது. குறைந்த பட்சமாக 6 டிகிரி வரை வெப்பம் பதிவானது. பல சுற்றுலா பகுதிகளில் உறை பனி காணப்பட்டது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.