பொங்கலுக்கு தயாராகும் “வாரிசு” அடுத்த வாரம் க்ளைமாக்ஸ் ஷூட்!

Varisu Shooting: வருகிற பொங்கல் பண்டிகைக்கு நடிகர் விஜய்யின் வாரிசு படமும், அஜித்தின் துணிவு படமும்  ரிலீசாக உள்ளதால், எக்கச்சக்க எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தி உள்ளது. பெரிய நடிகர்களின் இரண்டு படங்கள் ஒரே நாளில் வந்தால், ரசிகர்கள் இடையே மோதல் உருவாகலாம், சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படலாம் என பலர் எச்சரித்து வரும் நிலையிலும் கூட, இரண்டு நடிகர்களும் (விஜய் vs அஜித்) பொங்கல் பண்டிகைக்கு படம் வெளியாக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர். ஆனால் இரண்டு படங்களின் பணிகளும் இன்னும் இறுதிக்கட்டத்தை எட்டவில்லை எனக் கூறப்படுகிறது, அப்படியிருக்கும் வேளையில், எப்படி இரண்டு படமும் பொங்கலுக்கு வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வாரிசு படத்தை குறித்து முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது.

இன்னும் ஓரிரு வாரங்களில் வாரிசு படத்தின் படப்பிடிப்பை முடிக்க தளபதி விஜய் தயாராகி விட்டார். ஏனெனில் படக்குழு குழு இப்போது படத்தின் அறிமுக பாடலை பதிவு செய்து வருகிறது. அடுத்த வாரம் கிளைமாக்ஸ் படப்பிடிப்பிற்கு செல்லவுள்ளது. இந்த காட்சிக்காக ஹைதராபாத்தில் பிரத்யேக செட் போடப்பட்டு வருவதாகவும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொங்கல் 2023 கொண்டாட்டத்துக்கு வாரிசு தயாராக உள்ளது. அதில் எந்தமாற்றமும் இல்லை எனத் தெரிகிறது. அதேபோல மறுபுறம் துணிவு படம் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால் பொங்கல் பண்டிகைக்கு படத்தை கட்டாயம் வெளியிட வேண்டும் என படத்தின் நாயகன் அஜித் கூறியுள்ளதால், துணிவு படக்குழு இரவு, பகல் என்று பாராமல் தொடர்ந்து பணியாற்றி வருவதாகத் தகவல்கள் தெரிவிகின்றன. எனவே இம்முறை பொங்கல் 2023 பண்டிகை இரு நடிகர்களின் ரசிகர்களுக்கு பயங்கர கொண்டாட்டமாக இருக்கப்போகிறது. ஆனால் இரண்டு படமும் பொங்கலுக்கு வருமா, இல்லை ஒரு படம் மட்டும் தான் வருமா என்ற சந்தேகம் இன்னும் நீடித்து வருகிறது.

இது ஒருபுறம் இருக்க, வாரிசு மற்றும் துணிவு ஒரே நாளில் வெளியானால், இரண்டு படத்துக்கும் சரி சமமாக தியேட்டர்கள் ஒதுக்கப்படுமா? என்ற கேள்வியும் நெட்டிசங்கள் எழுப்பி வருகின்றனர். இந்த கேள்வி எழுப்பவும் காரணம் இருக்கிறது. அஜித்குமாரின் துணிவு படத்தை உதயநிதி ஸ்டாலினின் (சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ) ரெட்ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடுகிறது. வாரிசு படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ வாங்கியுள்ளது.

கடந்த சில வருடங்களாகவே தமிழகத்தில் பெரும்பாலான படங்களை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், அந்த நிறுவனம் வெளியிடும் படத்திற்கு தான் அதிக தியேட்டர்கள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அதேநேரத்தில் துணிவு படத்துக்கான தியேட்டர்கள் புக் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. 

இதுகுறித்து திருப்பூர் சுப்பிரமணியன், “பொங்கலுக்கு வெளியாகவுள்ள வாரிசு, துணிவு படங்களுக்கு இதுவரை எந்த திரையரங்குகளும் ஒதுக்கவில்லை என விளக்கம் அளித்துள்ளார். 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.