வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்
கடந்த காலத்தில் நாம் எடுத்த முடிவுகள் தான் நம் நிகழ்காலத்தை தீர்மானிக்கிறது. அதுபோல இன்று நாம் எடுக்கும் முடிவுகள் தான் நம் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது.
நம் தேர்ந்தெடுப்புகள் சரியாக இருந்தால் நம் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் இல்லையென்றால் வருத்தம் தான் மிஞ்சும்.
சிறுகதை:
அவர் பெயர் ராஜு. அவருக்கு இருக்கும் ஐந்து சென்ட் இடத்தில சொந்த வீடு கட்ட வேண்டும் என்பது அவரது கனவு. ஆனால் அவருக்கு கட்டுமான துறை பற்றியோ வீடுகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்றோ எதுவும் தெரியாது.
அவரது நண்பர் ஒருவர் கட்டுமான துறையில் பணிபுரிகிறார். ராஜு அவர் நண்பரிடம் தன் கனவை பற்றி கூறிய பொழுது, நீங்கள் கவலையை விடுங்கள் நான் உங்கள் கனவு இல்லத்தை கட்டித்தருகிறேன் என்று கூறினார். ராஜுவுக்கு மகிழ்ச்சி.
வேலை தொடங்கியது. ஒவ்வொரு கட்டமாக வேலை நடைபெறும் பொழுது, அதற்கு தேவையான தொகையை ராஜு கொடுக்க வேண்டும். இவ்வாறு வீட்டு வேலை நடந்து கொண்டிருந்தது.
வார இறுதி நாட்களில் மட்டுமே ராஜு சென்று பார்ப்பார். பொருட்களின் விலை பற்றி அவர் பெரிதும் அறிந்திருக்கவில்லை. தன் நண்பர் என்ன சொல்கிறாரோ அதை அப்படியே நம்பி பணத்தை மட்டும் கொடுத்து விடுவார்.
அவரோ இது என் சொந்த வீடு போல பார்த்து பார்த்து கட்டுகிறேன் நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள் என்பார். மாதங்கள் ஓடின வீட்டு வேலையும் நிறைவு பெற்றது. அவர்கள் போட்ட பட்ஜெட் 25 லட்சம் ரூபாய் ஆனால் இடையில் சில மாற்றங்கள் தேவைகள் என பட்ஜெட் 35 லட்சத்தை எட்டியது.
எப்படியோ வீட்டு வேலை முடிந்தது.
ராஜு பத்திரிக்கை அடித்து தன் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் தனது புது மனை புகுவிழாவிற்கு வரவேற்றார். வந்தவர்கள், 35 லட்சம் இந்த வீட்டிற்கு மிகவும் அதிகம் என்றனர். கட்டுமான துறையில் அனுபவம் உள்ளவர்கள் குறைந்தது 10 லட்சம் ரூபாய் உங்களிடம் ஏமாற்றி இருப்பார்கள் என்றனர்.
ராஜுவுக்கு வருத்தமாக இருந்தாலும் தன் நண்பர் அவ்வாறு செய்து இருக்க மாட்டார் என்ற நம்பிக்கையும் ஒருபுறம் இருந்தது.
ஆனால் இரண்டே வருடத்தில் வீட்டில் வயரிங், பிளம்பிங் என பிரச்னை வந்து கொண்டு இருந்தது. காரணம் தரமற்ற பொருட்கள். ராஜு தான் எடுத்த முடிவுகளை எண்ணி வருந்தினார்.
இங்கே ராஜு தன் நண்பர் என்று நம்பி மற்றவரிடம் ஆலோசனை கேட்காமல் அவரை தேர்ந்தேடுத்தார், பின் அவர் எடுக்கும் முடிவுகள் சரியாக இருக்கும் என்று எண்ணி அவர் கேட்கும் போது எல்லாம் பணத்தை கொடுத்தார். இந்த இரண்டும் தான் ராஜு எடுத்த தவறான முடிவுகள்.
அவர் அன்று எடுத்த இந்த முடிவுகள் இன்று அவருக்கு வருத்தத்தை மட்டுமல்ல நல்ல பாடத்தையும் கற்று கொடுத்தது.
எவ்வாறு சரியான முடிவுகள் எடுப்பது:
1. நாம் ஒரு முறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும்.
2. முன்னனுபவம் உள்ள நபர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும்.
3. நாம் எந்த துறையில் முடிவுகளை எடுக்க வேண்டுமோ அந்த துறைசார் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
4. உணர்ச்சிகரமான நேரத்தில் முடிவு எடுப்பதை சற்று தள்ளிப்போடவேண்டும்.
நாம் எதை தேர்ந்தெடுக்கிறோம், என்ன முடிவு செய்கிறோம் என்பது பொறுத்தே நம் வாழ்க்கை அமைகிறது.
நல்ல முடிவுகளை எடுப்போம். மகிழ்ச்சியாக வாழ்வோம்.
நன்றி,
நரேந்திரன் பாலகிருஷ்ணன்
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.