அரச ஊழியர்களின் உடைகள் தொடர்பில் மற்றுமொரு அறிவிப்பு


அரச ஊழியர்களின் உடை தொடர்பிலமற்றுமொரு அறிவிப்பு வெளியாகியுள்ளது.  

இதன்படி, அரச ஊழியர்களின் உடைகள் தொடர்பான சுற்றறிக்கையை மதிப்பீடு செய்து மீண்டும் சமர்ப்பிக்குமாறு பொது நிர்வாக அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, நாடாளுமன்றில்  இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நாட்டின் பல பாகங்களில் உள்ள ஆசிரியைகள்  நேற்றையதினம் புடவைக்கு பதிலாக மாற்று உடைகளை அணிந்து வந்திருந்தனர். 

அரச ஊழியர்களுக்கு வசதியான ஆடைகள் 

அரச ஊழியர்களின் உடைகள் தொடர்பில் மற்றுமொரு அறிவிப்பு | Government Employee Government Staffs Sri Lanka

இந்தநிலையில், குறித்த ஆசிரியர்களுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில், பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவித்த அமைச்சர்,

கடந்த கோவிட் தொற்று காலப்பகுதியில், அரச ஊழியர்கள் வசதியான ஆடைகளை அணியுமாறு பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த திட்டம்,  ஆசிரியர்களும் பொருந்தும் என கூறினார். 

பொது நிர்வாக அமைச்சினால் மீண்டும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து நிலைமையை மதிப்பீடு செய்வதாக அமைச்சர்  மேலும் கூறினார்.

அத்தோடு, நேற்றைய தினம் சாதாரண உடையில் ஆசிரியர்களின் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிய நிலையில், அவை பாடசாலை வகுப்பறைக்குள் எடுக்கப்பட்டவை அல்ல என்றும் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த இதன்போது சுட்டிக்காட்டினார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.