தமிழகத்தில் திருத்தி அமைக்கப்பட்ட மின்விநியோகத் திட்டத்தின் மூலம் 33% மின்வாரியமும், 67% தனியா நிறுவனங்களும் பணிகளை மேற்கொள்ள மத்திய பாஜக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் மறுசீரமைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் புதிய மின் வழித்தடங்கள் அமைப்பது, அதிக தூரம் கொண்ட வழிதடங்களில் பழுது ஏற்படும்பொழுது மொத்தமாக மின்விநியோகம் நிறுத்தப்படாமல் ஒவ்வொரு இரண்டு கிலோமீட்டர் “பவர் யார்டு” கட்டமைப்பை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது.
மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் ரூ.10,790 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்திற்கு மத்திய அரசு 8,600 கோடி ரூபாய் கடன் வழங்க உள்ளது. இந்த ஆண்டு மட்டும் 2,050 கோடி ரூபாய் செலவில் 26,000 மின்மாற்றிகள் மற்றும் 16 ஆயிரம் கிலோமீட்டர் மின் வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன.
இந்த திட்டப்பணி 33 % மின்வாரியமும் 67% தனியார் ஒப்பந்த நிறுவனம் வாயிலாகவும் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொள்ளும் 33 சதவீத பணியக்கு தேவைப்படும் மின்மாற்றிகள், மின் கம்பிகள் மட்டுமே வாங்க இந்தத் திட்டத்தின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற உபகரணங்கள் எல்லாம் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழ் நாடு மின்சாரம் வாரியம் மேற்கொள்ளும் பணிகள் பெரும்பாலும் தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கபடுவதால் முழுக்க முழுக்க தனியார் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் லாபம் நோக்கத்தோடு வழங்கப்பட்டதாகவே கருதப்படுகிறது. மத்திய அரசு கொண்டுவரும் தனியார் மயமாக்களை எதிர்க்கும் திமுக அரசு தற்பொழுது மின்வாரியத்தில் பெரும்பாலான ஒப்பந்தங்கள் தனியாருக்கு தரை பார்ப்பது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது. இதன் மூலம் மத்திய பாஜக அரசின் முழு கட்டுப்பாட்டில் திமுக அரசு சென்று விட்டதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.