முன்னாள் பிரதி அமைச்சர் முத்துசிவலிங்கம் காலமானார்

மலையகத்தின் மூத்த தொழிற்சங்கவாதிகளில் ஒருவரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் முன்னாள் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான முத்துசிவலிங்கம்  நேற்று காலை (22) நுவரெலியாவில் தனது இல்லத்தில் காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 79 

நுவரெலியா மாவட்டத்தின் உடபுஸ்ஸல்லாவ டலோஸ் தோட்டத்தில் முத்துகருப்பன் வீராயி தம்பதிகளின் நான்காவது பிள்ளையாவார்..தனது ஆரம்ப கல்வியை டலோஸ் தமிழ் வித்தியாலயத்திலும் பின்பு உயர் கல்வியை நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியில் கற்றவர்.

1959 ஆம் ஆண்டு இலங்கை தொழிலாளர் காங்கிரசில் உறுப்பினராக இணைந்தார்.. காங்கிரசில் பல்வேறு பதவிகளை வகித்தவர். 

அரசியலுக்கு அப்பால் பல பொது அமைப்புகளின் தலைவராகவும் செயற்பட்டதுடன்,பிரசித்தி பெற்ற நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயம், ஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயங்களின் ஆயுள் காப்பாளராக நீண்டகாலமாக பணியாற்றி ,ஆலய்ஙகளின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்து செயற்பட்டவர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.