வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவின் விர்ஜினியாவில் உள்ள வால்மார்ட் வணிக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் பலர் உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவரும் சுட்டு கொல்லப்பட்டார்.
அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் செஸபிக்கே நகரில் உள்ள வால்மார்ட் வணிக வளாகத்தில், அந்நாட்டு நேரப்படி நேற்று(நவ.,22) இரவு 10:12 மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனை போலீசாரும் உறுதி செய்துள்ளனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று பார்த்த போது, பலர் உயிரிழந்த நிலையில் அங்கு கிடந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவத்தை ஒருவர் தான் நடத்தியுள்ளதாக சந்தேகப்படும் போலீசார், அவரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் துப்பாக்கிச்சூடு நடந்த அந்த வணிக வளாகத்திற்கு யாரும் செல்ல வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement