கார்த்திகை தீபம் : 3000 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.! 

பொதுவாக கார்த்திகை மாதம் என்றால் அனைவருக்கும் நினைவிற்கு வருவது கார்த்திகை தீபமும், சபரிமலையும் தான். அதிலும் குறிப்பாக திருவண்ணாமலையில், கார்த்திகை தீபம் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.

இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தீபத்தை காண்பதற்கு வருவார்கள். கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த இரண்டு வருடமாக கார்த்திகை தீபம் நடைபெறவில்லை. 

இதையடுத்து, இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 6-ந்தேதி கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. கார்த்திகை தீபத்திற்கு மறுநாள் 7-ந்தேதி பௌர்ணமி உள்ளது. இந்நிலையில், இரண்டு சிறப்பு தினங்கள் தொடர்ந்து வருவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர். 

இதையடுத்து அடுத்த மாதம் 6-ந்தேதி காலை 6-மணிக்கு பரணி தீபமும் மாலை 6-மணிக்கு மகா தீபமும் ஏற்றப்பட உள்ள நிலையில், மகா தீபத்தைக்  காண்பதற்கு மக்கள் பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்து, கார், வேன் போன்றவற்றில் செல்வார்கள்.

அந்தவகையில் இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக செய்து வருகிறது. 

மேலும், திருவண்ணாமலைக்கு பக்தர்கள் சென்று வருவதற்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

சென்னை கோயம்பேடு, தாம்பரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், புதுச்சேரி, வேலூர், திருப்பத்தூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 3000 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. 

இந்த சிறப்பு பேருந்துகள் டிசம்பர் 6 மற்றும் 7-ந்தேதி ஆகிய இரண்டு நாட்களில் இயக்கப்படும். அதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து கழகம் தற்போது செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.