நியூயார்க்கில் கடும் பனிப்பொழிவு – அவசரநிலை பிரகடனம் அறிவிப்பு

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க்கில் வரலாறு காணாத அளவுக்கு பனி பொழிந்து வருவதால் அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் பல மாகாணங்களில் இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. பலத்த பனிகாற்றும் வீசுவதால் மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் வழக்கத்துக்கு மாறாக கடந்த 24 மணி நேரத்தில் 180 செ.மீ பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலைகளில் 6 அடி உயரத்துக்கு பனி படர்ந்துள்ளது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நியூயார்க்கில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து நியூயார்க் மேயர் ஹோசல் கூறும்போது, “எங்கள் கோரிக்கையை ஏற்று அவசர நிலையை பிரகடனப்படுத்தியதற்கு அதிபருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். எங்களது குழு மீட்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளது” என்றார்.

காலநிலை மாற்றம் காரணமாக உலக நாடுகள் பலவும் மோசமான வானிலை நிகழ்வுகளை சந்தித்து வருகின்றன. வறட்சி, வெள்ளம், புயல், தீவிர பனிப்பொழிவு, மழை ஆகியவற்றை உலக நாடுகள் எதிர் கொண்டுள்ளன. எனவே காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த சர்வதேச அளவில் தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.