ஆவின் அதிரடி.. பால் அட்டையுடன் ரேஷன் கார்டை இணைக்க உத்தரவு..!

மாதாந்திர அட்டைதாரர்களுக்கான ஆவின் பால் பாக்கெட்டுகளை வணிக ரீதியாக விற்பதை தவிர்க்க, மாதாந்திர பால் அட்டையுடன் ரேஷன் கார்டை இணைக்க ஆவின் உத்தரவிட்டுள்ளது.

தமிழக அரசு நிறுவனமான ஆவின் மூலம் விவசாயிகளிடமிருந்து தினமும் 40 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் கொழுப்புச் சத்து அடிப்படையில் பிரிக்கப்பட்டு, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மற்றும் நீல நிற பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, ஆரஞ்சு நிற பாக்கெட் பால் சில்லறை விலையில் 60 ரூபாய்க்கும், சிகப்பு நிற பாக்கெட் பால் 76 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரத்தில், மாதாந்திர அட்டைதாரர்களுக்கு 46 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஆரஞ்சு நிற பாக்கெட் பாலை சிலர் மாதாந்திர அட்டையில் வாங்கி வணிக ரீதியாக விற்பனை செய்வதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, ஆவின் மாதாந்திர அட்டையுடன் ரேஷன் அட்டையை இணைக்கும் பணியை ஆவின் நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி, 27 மண்டலங்களில் இணையதளம் மூலமாக இந்த பணி நடைபெற்று வருவதாகவும், இதன் மூலம் முறைகேடுகளை தவிர்க்க முடியும் எனவும் ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.