கோல்கட்டா: மேற்குவங்கத்தின் புதிய கவர்னராக சிவி ஆனந்த போஸ் இன்று (நவ.,23) பதவியேற்றார்.
கவர்னர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் மம்தா பானர்ஜி, சபாநாயகர் பிமன் பானர்ஜி முன்னிலையில், கோல்கட்டா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவஸ்தவா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
1977ம் ஆண்டு பிரிவை சேர்ந்த ஓய்வுபெற்ற கேரள கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஆனந்த போஸ், கடந்த நவ.,17ல் மேற்குவங்க புதிய கவர்னராக நியமிக்கப்பட்டார். இவர் பணி ஓய்விற்கு பிறகு கோல்கட்டாவில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தின் நிர்வாகியாக பணியாற்றினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement