தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்க கடலில் தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டி நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று மாலை காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து இன்று காலை தெற்கு ஆந்திர மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவுகிறது.

இதன் காரணமாக இன்று வட தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடை மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளுவர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

24/11/2022 முதல் 27/11/2022 வரை: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் அதிகபட்ச வெப்பநிலையாக 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.