குடிநீர் குழாய் பதிப்பு பணியில் மோசடி?வைரல் வீடியோவை எதிர்த்து BDO காவல்நிலையத்தில் புகார்

திருவண்ணாமலை மாவட்டம் இந்திரவனம் கிராமத்தில் ரூ.3.69 லட்சம் மோசடி செய்து போலியான குடிநீர் குழாய் அமைத்ததின் காணொலி வைரலான நிலையில், வீடியோ எடுத்தவர் மேல் சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபால் தரப்பில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் இந்திரவனம் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்களில்  2,000 மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் குடிநீர் வசதிக்காக 1994இல் குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 25 வருடங்களுக்கு பிறகு தற்போது ஜல் ஜீவன் சக்தி திட்டத்தின் முலமாக புதிய குடிநீர் குழாய் பைப்புகள் அமைப்பு வேலைகள் நடந்தன. அவை கடந்த சில நாட்களுக்கு முன்பாக தொடங்கப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் (நவம்பர் 21) `பணிகள் முழுமை பெறாமலே பணி முடிக்கப்பட்டுள்ளது. பணிக்காக ரூ.3.69 லட்சம் செலவு செய்ததாகவும் கணக்கு எழுதியுள்ளார்கள். இந்த போலியான கணக்கை கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் சமர்பித்துள்ளார்கள். அவர்களும் பணி முடிந்ததாக சான்றிதழ் தந்துள்ளனர். ஆனால் பணி நடக்கவேயில்லை’ என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
அந்த வைரல் வீடியோ:

வீட்டுக்கு குடிநீர் திராவிட மாடல்? திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டம், இந்திரவனம் கிராமம். விஞ்ஞான ஊழல்வாதி வழியில் ரூ4000 கோடி சென்னை மழைநீர் வடிகால் ஊழலை தொடர்ந்து திருவண்ணாமலையில். @EPSTamilNadu @AIADMKOfficial @AIADMKITWINGOFL pic.twitter.com/pXDrCJNRny
— Kovai Sathyan (@KovaiSathyan) November 21, 2022

நமக்கு கிடைத்த தகவல்களின்படி 12 நாட்களுக்கு முன்னதாகவே பணியை தொடங்கி 104 இடங்களில் குடிநீர் குழாய் அமைத்துள்ளார்கள் என சொல்கின்றனர். ஆனால் அதில் 50க்கும் மேற்பட்ட இடங்களில் குழாய் நடுவதற்கு பதிலாக கண் துடைப்பாக போலியான குழாய்களை நட்டு உள்ளார்கள்’ என்று சொல்லப்படிகிறது. மேலும் இந்த பணியை முடித்ததாக கூற சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கையூட்டு பணம் கொடுத்ததாகவும், அதன் பேரில் அதிகாரிகள் முடித்தாக சான்றிதழ் வழங்கி உள்ளார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
image

இந்நிலையில் இளைஞர் வெளியிட்ட மோசடி குறித்த வீடியோ வைரலானதால், சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளின் உத்திரவின் பேரில் வருவாய் துறையினர்கள் நேரடியாக கிராமத்திற்கு சென்று, ஆய்வு மேற்கொண்டனர். நாமும் கள ஆய்வு செய்தோம். அதன்படி, பணிகளை முடிக்காமலே அதிகாரிகளின் துணைகொண்டு பணி முடித்தற்கான சான்றிதழ் வாங்கப்பட்டது நம் கள ஆய்வில் உறுதியாகியுள்ளது. இருந்தபோதிலும் இதுபற்றி அதிகாரிகள் தரப்பில் எதுவும் அதிகாரபூர்வமாக சொல்லப்படவில்லை. மோசடியில் யாரேனும் ஈடுபட்டிருந்தால், அவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று மட்டும் வருவாய் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையே கிராமத்தில் இன்று காலை முதல் போலியாக போடப்பட்ட குழாய்களை அகற்றி முற்றிலுமாக தரமான குடிநீர் குழாய்களை அதிகாரிகள் முன்னிலை குழாய் பதிப்பு நடைப்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இன்று சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ரேணுகோபால் தரப்பில் “இந்திரவனம் கிராம இளைஞர் முரளி கிருஷ்ணன் என்பவர், குடிநீர் குழாய் பதிப்பு முற்று பெறாமலேயே முடிவடைந்ததாக நாங்கள் சான்றிதழ் வாங்கியதாகவும், மேலும் போலியான குழாய் அமைத்ததாகவும் வீடியோ பதிவிட்டு, போலியான வீடியோ வெளியிட்டிருக்கிறார்” என்று கூறப்பட்டு, அவர் மீது வழக்கு போட்டிருக்கிறார். இது சி.எஸ்.ஆர்-ஆக பதியப்பட்டுள்ளது.
image
அந்த CSR -ல், “ஊராட்சி நிர்வாகம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றிய இந்திரவனம் ஊராட்சியில் 15 ஆவது நிதிக்குழு 2022 – 2023 ம் ஆண்டு திட்டம் தொடர்பாக பணி நடைப்பெற்று வருகிறது. இப்பணியினை செய்ய முடியாதவாறு தவறான நோக்கத்தில் வீடியோ பதிவு செய்து இனையதளத்தில் வைரலாக பரப்பியுள்ளார். மேற்படி திட்டம் குறித்து தவறான வீடியோ பதிவிட்டமைக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரியுள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.