டிசம்பர் மாதம், கிறிஸ்துமஸ் பண்டிகையுடன் கூடவே சில முக்கிய மாற்றங்களையும் கொண்டு வருகிறது.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, ஒரு முக்கிய மாற்றம், டிசம்பர் மாதத்திற்காக கோவிட் கட்டுப்பாடுகள் எதுவும் திட்டமிடப்படவில்லை என்பது ஒரு நல்ல செய்தி.
சுவிட்சர்லாந்தில், டிசம்பர் மாதத்தில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்விருக்கின்றன என்பதை திகதிவாரியாக பார்க்கலாம்.
டிசம்பர் 1: மருந்துகள் விலை குறைப்பு
பெடரல் பொது சுகாதார அலுவலகம், 300க்கும் அதிகமான மருந்துகளின் விலையை 10 சதவிகிதம் வரை குறைத்துள்ளது. இந்த விலை குறைப்பு டிசம்பர் 1ஆம் திகதி அமுலுக்கு வருகிறது.
டிசம்பர் 7: பெடரல் கவுன்சிலின் புதிய உறுப்பினர்கள் தேர்வு
சுவிஸ் நிதி அமைச்சர் Ueli Maurer மற்றும் போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் Simonetta Sommaruga ஆகியோர் டிசம்பர் 31ஆம் திகதியுடன் அந்தந்த பதவிகளிலிருந்து விலகும் நிலையில், அவர்களுக்கு பதிலாக இரண்டு புதிய அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
டிசம்பர் 11: 2023ஆம் ஆண்டுக்கான ரயில்வே கால அட்டவணை வெளியீடு
சுவிஸ் பெடரல் ரயில்வே, டிசம்பர் மாதம் 11ஆம் திகதி, 2023ஆம் ஆண்டுக்கான தனது புதிய கால அட்டவணையை வெளியிட உள்ளது.
டிசம்பர் 24 மற்றும் 25: கிறிஸ்துமஸ் பண்டிகை
இம்முறை, கிறிஸ்துமஸ் ஈவ் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை ஆகியவை, வார இறுதி நாட்களில் அமைந்துள்ளன. டிசம்பர் 26ஆம் திகதி, சுவிஸ் ஜேர்மன் மாகாணங்களுக்கு பொது விடுமுறையாகும்.
டிசம்பர் 31: 2022க்கு விடை கொடுக்கும் நாள்
இந்த ஆண்டு முடிவுக்கு வரும் நிலையில், அது 2020 மற்றும் 2021போல கோவிட் போன்ற பிரச்சினைகள் அதிகமில்லாத ஆண்டாக அமைந்ததில் அனைவருக்குமே மகிழ்ச்சிதான்.
என்றாலும், உக்ரைன் போர், பணவீக்கம், ஆற்றல் பிரச்சினை என சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்தன.
அந்த பிரச்சினைகள் எல்லலாம் முடிவுக்கு வந்து, புத்தாண்டு உலகம் முழுவதற்கும் இனிய ஆண்டாக திகழும் என நம்புவோம்!