அனுமதி பெறாமல் 5 யானைகளை பயன்படுத்தி காட்சிகள் படமாக்கப்பட்டதாக வந்த புகாருக்கு 7 நாட்களுக்குள் பதிலளிக்க உத்தரவு
பிரபல நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தெலுங்கு இயங்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கிய இந்த படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், வாரிசு படத்தை ஆந்திராவில் வெளியிட தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்த நெருக்கடிக்கு மத்தியில் வாரிசு படத்துக்கு அடுத்தடுத்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது. வாரிசு படத்தில் அனுமதி பெறாமல் 5 யானைகளை பயன்படுத்தி காட்சிகள் படமாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அந்த புகாரை பெற்றுக்கொண்ட விலங்குகள் நல வாரியம், புகார் குறித்து 7 நாட்களுக்குள் பதிலளிக்க வாரிசு படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது நடிகர் விஜய்க்கும், பட குழுவுக்கும் தலை வழியை கொடுத்துள்ளது. ஏற்கனவே, போக்குவரத்து வீதிகளை மீறி காரில் கருப்பு நிற பிலிம் ஒட்டியதாக நடிகர் விஜய்க்கு காவல்துறை ரூ.1000 அபராதம் விதித்தது. கடந்த 20ம் தேதி பனையூரில் நடைபெற்ற விஜய் மக்கள் இயக்கம் ஆலோசனை கூட்டத்திற்கு நடிகர் விஜய் காரில் சென்றிருந்த நிலையில் போக்குவரத்து போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.