உத்தர பிரதேசத்தில் 500 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவை எலி சாப்பிட்டுவிட்டதாக காவல்துறை நீதிமனறத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் மதுரா காவல்துறை சிறப்பு NDPS (போதை மருந்துகள் மற்றும் உளவெறியூட்டும் பொருட்கள் சட்டம் (1985)) நீதிமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 500 கிலோவுக்கு மேல் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை எலிகள் சாப்பிட்டதாகக் கூறியுள்ளது.
ஷெர்கர் மற்றும் நெடுஞ்சாலை காவல்நிலையத்தில் இரண்டு வெவ்வேறு வழக்குகளில் 386 மற்றும் 195 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
காவல்துறையின் அறிக்கை
இதையடுத்து, என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கில் மீட்கப்பட்ட 586 கிலோ கஞ்சாவை ஆஜர்படுத்துமாறு நீதிமன்றம் கூறியதை அடுத்து காவல்துறையின் அறிக்கை வெளியிடப்பட்டது.
அறிக்கை சமர்ப்பித்த வாதிட்ட காவல்துறை வழக்கறிஞர் “சேமிக்கப்பட்ட பொருட்களை எலிகளிடம் இருந்து காப்பாற்றும் இடம் காவல்நிலையத்தில் இல்லை. மீதமான கஞ்சாவும் அதிகாரிகளால் அழிக்கப்பட்டது” என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும், “அளவில் சிறியதாக இருப்பதால், எலிகளுக்கு காவல்துறையைப் பற்றிய பயம் இல்லை, மேலும் காவல்துறை அதிகாரிகளை சிக்கலைத் தீர்ப்பதில் நிபுணர்களாகக் கருத முடியாது” என்று வழக்கறிஞர் கூறினார்.
நீதிமன்றம் தெரிவித்ததாவது..
இதனை விசாரித்த நீதிமன்றம், நவம்பர் 18 தேதியிட்ட, நெடுஞ்சாலை காவல் நிலையத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட இந்த வழக்கில், மீட்கப்பட்ட 195 கிலோ கஞ்சா எலிகளால் அழிக்கப்பட்டது, எலிகளை அகற்றவும், எலிகள் உண்மையில் 581 கிலோ கஞ்சாவை உட்கொண்டனவா என்பதற்கான ஆதாரத்தை வழங்கவும் மதுரா எஸ்எஸ்பிக்கு உத்தரவிட்டது.
அத்துடன், இந்த விவகாரம் தொடர்பாக ஆதாரங்களுடன் நவம்பர் 26-ஆம் திகதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
காவல்துறை கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள கஞ்சாவை ஏலம் விடவும் அல்லது அகற்றவும் ஐந்து அம்ச வழிமுறைகளையும் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.