வேறு சமூகத்தில் காதலித்த மகள்., கழுத்தை நெரித்து கொன்ற தாய்- தமிழகத்தில் அரங்கேறிய கௌரவ கொலை


தமிழக தென்மாவட்டம் திருநெல்வேலியில், திருமணத்திற்கு மறுத்த மகள் காதலனுடன் ஓடிவிடுவேன் எனக் கூறியதால் தாய் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது முற்றிலும் கௌரவ கொலை என சந்தேகிக்கப்படுகிறது.

திருநெல்வேலியில், பாலாமடை பகுதியைச் சேர்ந்தவர்கள் பேச்சி – ஆறுமுக கனி தம்பதியினர். இவர்களுக்கு 19 வயதில் அருணா என்ற மகள் உள்ளார். கோயம்புத்தூரில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். அவரது தந்தையும், சகோதரனும் சென்னையில் தங்கி ஆட்டோ ஓட்டி வருவதாக கூறப்படுகிறது.

வேறு சமூகத்தில் காதலித்த மகள்., கழுத்தை நெரித்து கொன்ற தாய்- தமிழகத்தில் அரங்கேறிய கௌரவ கொலை | Tirunelveli Woman Killed Daughter Attempt SuicideNDTV

மாற்று சமூகத்தில் காதல்

அருணாவுக்கு வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த விவரம் குடும்பத்திற்கு தெரியவரவே அவருக்கு திருமண முயற்சி ஏற்பாடு செய்துள்ளனர்.

இதனை அறிந்த அருணா தனது காதல் விவகாரத்தை தாயிடம் தெரிவித்தபோது, சரி ஊருக்கு வா பேசிக்கலாம் என திருநெல்வேலிக்கு அழைத்துள்ளார் ஆறுமுக கனி.

அருணா வீட்டுக்கு வந்த நிலையில் அவருக்கு அவர் சார்ந்த சமூகத்தை சேர்ந்த ஒரு நபருடன் திருமணம் செய்து வைக்க ஆறுமுக கனி முடிவு செய்துள்ளார்.

காதலனுடன் சென்று விடுவேன்

இதனை அறிந்த அருணா காதலனை தான் திருமணம் செய்துக்கொள்வேன் என சண்டையிட்டு தனது தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

மீறி வலுக்கட்டாயமாக வேறு நபருக்கு திருமணம் செய்துகொடுக்க நினைத்தால் அந்த நபரிடமே என் காதலை கூறி காதலனுடன் சென்று விடுவதாக அருணா மிரட்டியுள்ளார்.

கழுத்தை நெறித்து கொலை

இதனால் ஆத்திரமடைந்த ஆறுமுக கனி மகள் என்று பாராமல், துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொலை செய்ததாக கூறப்படுகிறது.

கொலை சம்பவம் வெளியே தெரிந்து தாம் மாட்டிக்கொள்வோம் என நினைத்த அவர் வீட்டில் இருந்த ஹேர் டை மற்றும் மாத்திரைகளை விழுங்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த உறவினர்கள் ஆறுமுக கனியை மீட்டு சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

உயிரிழந்த அருணாவின் உடலை கைப்பற்றி சீவலப்பேரி பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது முற்றிலும் கௌரவ கொலை என சந்தேகிக்கப்படும் நிலையில், பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.