விஜய்யின் ‘வாரிசு’க்கு அடுத்த சிக்கல்: 7 நாட்களுக்குள் பதிலளிக்க நோட்டீஸ்..!

உரிய அனுமதி பெறாமல் 5 யானைகளை பயன்படுத்தி காட்சிகள் படமாக்கப்பட்டதாக வந்த புகாருக்கு 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நடிகர் விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் வரும் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. பிரபல தெலுங்கு இயங்குநர் வம்சி படிப்பள்ளி இயக்கியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் எடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், ‘வாரிசு’ திரைபடத்தை ஆந்திராவில் வெளியிட தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சில் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த நெருக்கடிக்கு மத்தியில், ‘வாரிசு’ படத்துக்கு அடுத்தடுத்து சிக்கல் ஏற்பட்டு வருகிறது.

‘வாரிசு’ திரைப்படத்தில் உரிய அனுமதி பெறாமல் 5 யானைகளை பயன்படுத்தி காட்சிகள் படமாக்கப்பட்டதாக புகார் எழுந்தது. அந்த புகாரை பெற்றுக்கொண்ட விலங்குகள் நல வாரியம், இந்த புகார் குறித்து 7 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என ‘வாரிசு’ படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது, நடிகர் விஜய் மற்றும் பட குழுவுக்கு தலைவலியை கொடுத்துள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.