டெல்லி: ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா உள்பட சில அமைப்புகள் தொடர்ந்த வழக்கை நவம்பர் 29ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. விலங்குகளை முன்னிலைப்படுத்தி விளையாடப்படும் விளையாட்டுகள் விலங்குகள் வதை தடுப்புச் சட்ட விதிகளை மீறுகின்றனவா? என கேள்வி எழுப்பப்பட்டது. பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற வேண்டும் என மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா வாதிட்டார். ஜல்லிக்கட்டு, சக்கடி-க்கு ஆதரவாக தமிழ்நாடு, மராட்டிய அரசுகள் கொண்டு வந்த சட்டங்கள் அரசியல் சாசனத்துக்கு எதிரானவையா? ஜல்லிக்கட்டை கலாச்சாரம் என தமிழ்நாடு கருத முடியுமா? என மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லூத்ரா வாதிட்டார். விலங்குகளுக்கு தீங்கு இழைக்கப்படக்கூடாது என்பதே விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் நோக்கம் எனவும் லூத்ரா கூறினார்.