தன்னைக் கொல்ல ஒருவர் வில் அம்புடன் வந்ததைக் குறித்து அறிந்த மகாராணியார், உடனடியாக என்ன சொன்னாராம் தெரியுமா?
வில் அம்புடன் விண்ட்சர் மாளிகைக்குள் நுழைந்த நபர்
இந்திய வம்சாவளியினரான Jaswant Singh Chail (20) என்பவர், பிரித்தானிய மகாராணியார், இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது மனைவியான கமீலா ஆகியோருடன் விண்ட்சர் மாளிகையில் இருக்கும்போது, வில் அம்புடன் மாளிகைக்குள் நுழையும்போது பாதுகாவலர்களிடம் சிக்கினார்.
பிரித்தானியர்கள் இந்தியாவை ஆண்டபோது, 1919இல் இந்தியாவிலுள்ள அமிர்தரஸ் என்ற இடத்தில் பிரித்தானிய படையினரால் இந்தியர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு பழி வாங்குவதற்காக தான் மகாராணியாரை கொல்ல வந்ததாக தெரிவித்திருந்தார் Jaswant Singh.
Credit: Getty – Contributor
மகாராணியாரின் ரெஸ்பான்ஸ்
தன்னைக் கொல்வதற்காக ஒருவர் விண்ட்சர் மாளிகைக்குள் நுழைந்ததைக் குறித்த விடயத்தைக் கேள்விப்பட்ட மகாராணியார், அப்படி ஏதாவது நடந்திருந்தால், அது கிறிஸ்துமஸ் பண்டிகையை சோகமான ஒன்றாக்கியிருக்கும் இல்லையா? என்று தன் உதவியாளர் ஒருவரிடம் வேடிக்கையாகக் கூறினாராம்!
மகாராணியாரைக் கொல்வதற்காக Jaswant Singh விண்ட்சர் மாளிகைக்குள் நுழைந்த நாள், கிறிஸ்துமஸ் பண்டிகை என்பது குறிப்பிடத்தக்கது.