நடிகர் கெளதம் கார்த்திகும், நடிகை மஞ்சிமா மோகனுக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.
கெளதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன்
மூத்த தமிழ் திரைப்பட நடிகர் கார்த்திக்கின் மகன் கெளதம் கார்த்திக் மற்றும் கேரளாவில் இருந்து தமிழ் திரையுலகிற்கு வந்த நடிகை மஞ்சிமா மோகன் இருவரும் தேவராட்டம் படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தனர்.
அப்போது இருவருக்குள் காதல் ஏற்பட்டது, இதையடுத்து இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போகிறோம் என சமீபத்தில் அறிவித்தனர்.
Happy married life @mohan_manjima and @Gautham_Karthik wishing you the best 👏 👍 ☺ #gauthamkarthik #manjimamohan #wedding pic.twitter.com/2E2jNAbp7I
— Vishnu Sudarsanan🌟🌟🌟 (@vishnuviews) November 28, 2022
எளிமையாக நடைபெற்ற திருமணம்
இந்த நிலையில் இன்று கெளதம் கார்த்திக் – மஞ்சிமா திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் தம்பதியின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
புதுமணதம்பதியின் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.