இளவரசர் ஹரி தன்னை விட 13 வயது அதிகமான பெண்ணை முன்னர் காதலித்த நிலையில் அது தொடர்பில் அப்பெண் தற்போது மனம் திறந்துள்ளார்.
இளவரசர் ஹரி
இளவரசர் ஹரி (38) கடந்த 2018ல் மேகன் மெர்க்கலை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு முன்னர் தன்னை விட 13 வயது அதிகமான காத்தரீன் ஒம்மனே என்ற பெண்ணை அவர் காதலித்திருக்கிறார்.
ஹரிக்கு 21 வயது இருந்த போது 34 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாயான காத்தரீனை சந்தித்திருக்கிறார்.
இருவரும் நெருங்கி பழகினார்கள்.
2006 காலக்கட்டத்தில் லண்டனில் உள்ள மதுபான விடுதியில் இருவரும் அடிக்கடி சந்தித்து தங்கள் காதலை வளர்த்து வந்தனர்.
pagesix
சுயசரிதை
அந்த சமயத்தில் ஹரி தனக்கு முத்தம் கொடுத்தார் என காத்தரீன் தற்போது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது தெரிவித்திருக்கிறார்.
இவர்களின் காதல் ஒரு கட்டத்தில் முறிந்திருக்கிறது.
ஹரி குறித்து காத்தரீன் கூறுகையில், நாங்கள் இருவரும் அப்போது ஒரு சிகரெட்டை பகிர்ந்து கொள்வோம்.
ஹரிக்கு மகிழ்ச்சியும், வெற்றியும் எதிலும் கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
அவர் மிகவும் தைரியமான, அழகான, புத்திசாலித்தனமான அற்புதமான மனிதர் என கூறியுள்ளார்.
ஹரி தனது சுயசரிதையை விரைவில் வெளியிட உள்ளார். அதில் அவர் முன்னாள் காதலிகளைப் பற்றி எழுத இருப்பதால், அதன் வெளியீட்டிற்கு முன்னதாகவே அதிக எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.
shutterstock/NBCUPHOTOBANK/Rexfeatures