பயணிகளுக்கு குட் நியூஸ்.. கூடுதல் மெட்ரோ ரயில் இயக்கம்..!

சென்னையில், நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் ரயில் இயக்கப்படும் என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘வண்ணாரப்பேட்டை – ஆலந்தூர் இடையே 3 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும்.

அதன்படி, காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் 3 நிமிடத்துக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும். அதுபோல், விம்கோ நகர் – விமான நிலையம் இடையே 6 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.

மேலும், சென்னை சென்ட்ரல் – பரங்கிமலை, சென்னை சென்ட்ரல் – விமான நிலையம் இடையே 12 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.