குவஹாத்தி அசாமின் குவஹாத்தியில், சீனியர்மாணவர்களின் கொடூரமான ‘ராகிங்’கை தாங்க முடியாத முதலாண்டு மாணவன், விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்ததில் கவலைக்கிடமாக உள்ளார். வடகிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
இங்கு, குவஹாத்தியில் உள்ள திப்ரூகர் பல்கலையில், ஆனந்த் சர்மா என்ற மாணவன் பி.காம்., முதலாண்டு படித்து வருகிறார். பல்கலை விடுதியில் தங்கி உள்ள அவரை, சீனியர் மாணவர்கள் கடுமையாக, ராகிங் செய்துள்ளனர்.இது தொடர்பாக, கடந்த 17ம் தேதி ஆனந்த் சர்மா பல்கலையில் புகார்
அளித்து உள்ளார். இதில் ராகிங்கில் ஈடுபட்டவர்களின் பெயர் உட்பட அனைத்து விபரங்களையும் எழுத்துப்பூர்வமாக அளித்து உள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு சில சீனியர் மாணவர்கள் ஆனந்த் சர்மாவை மீண்டும் ராகிங் செய்துள்ளனர். ஒருகட்டத்தில் இதை பொறுத்துக் கொள்ள முடியாத அவர், விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து
உள்ளார். இதில், அவரது கால் மற்றும் விலா எலும்புகள் உடைந்தன. அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனந்த் சர்மாவின் பெற்றோர் அளித்த புகாரின்படி, முன்னாள் மாணவர் ஒருவர் மற்றும் நான்கு இந்நாள் மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
”ராகிங்கில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்கள் இதுபோன்ற செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது,” என, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement