
சந்திரமுகியாக மாறப் போகும் கங்கனா
கடந்த 2005ம் ஆண்டில் பி .வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, வடிவேலு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் சந்திரமுகி. சூப்பர் ஹிட் ஆன இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை 17 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது ராகவா லாரன்ஸ் நடிப்பில் இயக்கி வருகிறார் பி .வாசு. இந்த படத்தில் லாரன்ஸ் உடன் வடிவேலு, ராதிகா உட்பட பலர் நடிக்கிறார்கள். இதன் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் முதல் பாகத்தில் ஜோதிகா நடித்த சந்திரமுகி வேடத்தில் யார் நடிக்க போகிறார் என்ற கேள்வி எழுந்தது. இப்போது ஹிந்தி நடிகை கங்கனா ரணாவத் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தமிழில் ஜெயம் ரவி நடித்த ‛தாம் தூம்' மற்றும் ஏ.எல்.விஜய் இயக்கிய ‛தலைவி 'ஆகிய படங்களில் நடித்துள்ள கங்கனா, விரைவில் சந்திரமுகி 2 படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.