ஹூப்பள்ளி, : மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் புதிய அலுவலக திறப்பு விழாவில், பிரியாணி, கபாப் பெறுவதில் பலரும் ‘தள்ளுமுள்ளு’வில் ஈடுபட்டனர்.
ஹூப்பள்ளி மாநகராட்சி காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் டோரேராவ் மணி குண்டலாவின் புதிய அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. அலுவலகத்தை காங்கிரஸ் எம்.எல்.ஏ., அப்பாய்யா பிரசாத் திறந்து வைத்தார். பல்வேறு மடாதிபதிகள், மேயர் ஈரேஷா, துணை மேயர் உமா மற்றும் காங்கிரசார் பங்கேற்றனர்.
விழாவில் பங்கேற்றவர்களுக்கு பிரியாணி, கபாப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதை பெறுவதற்கு கவுன்சிலர்கள், வார்டு மக்கள், கட்சியினர், உள்ளாட்சி தலைவர்கள் என பலரும் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர். இதை பார்த்து, பலரும் முகம் சுளித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement