FIFA உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக பெண் நடுவர்கள்: தடைகளை உடைத்தெறிந்த பெண்மணிகள்


வியாழக்கிழமை நடைபெற உள்ள கோஸ்டாரிக்கா மற்றும் ஜேர்மன் இடையிலான உலக கோப்பை கால்பந்து போட்டியில் மிகப்பெரிய வரலாற்று நிகழ்வு நடைபெற இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வரலாறு படைக்கும் பெண்மணிகள்

2022ம் ஆண்டு டிசம்பர் 1ம் திகதி கத்தார் அல் பேட் மைதானத்தில் நடைபெற உள்ள கோஸ்டாரிக்கா மற்றும் ஜேர்மன் இடையிலான போட்டியின் போது, முதல் முறையாக ஆண்களுக்கான உலக கோப்பை கால்பந்து வரலாற்றில்  ஸ்டெபானி ப்ராபாரட் என்ற பெண் நடுவராக செயல்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

38 வயதாகும் பிரான்ஸ் நடுவர் ஸ்டெபானி ப்ராபாரட் தனது பெயரை கால்பந்து வரலாற்றில் எழுதுவது இது முதல் முறை அல்ல. லீகு 1 மற்றும் யுஇஎஃஏ சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் நடுவராக இருந்த முதல் பெண்மணி என்ற பெயரையும் இவர் பெற்றுள்ளார்.

உலக கோப்பையில் இவருடன் மேலும் இரண்டு பெண் நடுவர்கள் இணைந்து இந்த சாதனையில் ஈடுபட உள்ளனர். 

கோஸ்டாரிக்கா மற்றும் ஜேர்மன் இடையிலான உலக கோப்பை கால்பந்து போட்டியில்  ஸ்டெபானி ப்ராபாரட் தலைமை நடுவராக செயல்பட, அவருக்கு உறுதுணையாக நியூசா பேக் மற்றும் கரேன் டயஸ் ஆகிய இருவரும் துணை நடுவர்களாக செயல்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்களுக்கான உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் பெண் ஒருவர் நடுவராக இருப்பதும், அதிலும் மூன்று பெண் நடுவர்கள் இணைந்து போட்டியை வழிநடத்தி செல்ல இருப்பது வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

stephanie frappart- ஸ்டெபானி ஃப்ராபார்ட்stephanie frappart- ஸ்டெபானி ஃப்ராபார்ட்(Fifa.com)

போட்டியை எதிர்கொள்ள எனக்கு தெரியும்

இந்நிலையில் கால்பந்து வரலாற்றில் சாதனை படைக்க இருக்கும் ஸ்டெபானி ப்ராபாரட் வெளியிட்டுள்ள கருத்தில், ஆண்களுக்கான உலகக் கோப்பை, உலகின் மிக முக்கியமான விளையாட்டுப் போட்டியாகும்.

பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவில் நான்தான் முதல் நடுவராக இருந்தேன், எனவே அதை எப்படி எதிர்கொள்வது என்பது எனக்குத் தெரியும் என தெரிவித்துள்ளார்.

அத்துடன் உலக கோப்பைக்கு முன்பாக FIFA நடுவர்கள் குழுவின் தலைவரான Pierluigi Collina, ஆண்களுக்கான உலக கோப்பை கால்பந்து போட்டியில் மூன்று பெண் நடுவர்களை பற்றி எனக்கு தெரிவித்தார்.

அவர்கள் பெண்கள் என்பதால் தேர்ந்தெடுக்கப்படவில்லை, FIFA நடுவர்களாக அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்கள் எந்த ஆட்டத்திற்கும் நடுவராக இருக்க முடியும் என பெருமையுடன் தெரிவித்துள்ளார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.