
டிச., 22ல் திரைக்கு வரும் நயன்தாராவின் ‛கனெக்ட்'
நயன்தாரா நடித்த ஓ2 என்ற படம் ஓடிடி தளத்தில் வெளியானதை அடுத்து தற்போது அவர் நடித்துள்ள கனெக்ட் படம் தியேட்டரில் வெளியாக உள்ளது. இந்த படத்தை ஏற்கனவே நயன்தாரா நடித்த மாயா என்ற படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இருக்கியுள்ளார். நயன்தாராவுடன் இணைந்து சத்யராஜ், அனுபம்கெர், வினய் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். விக்னேஷ் சிவன் தனது ரவுடி பிக்சர் சார்பில் தயாரித்திருக்கிறார். ஹாரர் மற்றும் திரில்லர் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தின் டீசர் ஏற்கனவே வெளியான நிலையில் வருகிற டிசம்பர் 22ம் தேதி இப்படம் திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்திற்கு சென்சாரில் யுஏ சான்று கிடைத்துள்ளது. 99 நிமிடங்கள் இந்த படத்தின் ரன்னிங் டைம் இருக்கும்.