உலகின் மிகக் கொடிய நோய்களில் ஒன்று எய்ட்ஸ். எச்.ஐ.வி., (ஹியூமன் இம்யுனோ டெபிஷியன்சி வைரஸ்) எனும் வைரசால் ஏற்படுகிறது. இது மனித உடலில் உள்ள ரத்த வெள்ளை அணுக்களை அழிக்கிறது. பின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை தாக்கி, நோய்க்கு எதிராக உடல் போராட முடியாத நிலையை ஏற்படுத்துகிறது. கடைசியில் மரணம் ஏற்படுகிறது.
இது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டிச.,1, உலக எய்ட்ஸ் தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது
எய்ட்ஸ் பாதிப்பு, தடுக்கும் முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக டிச. 1ல் உலக எய்ட்ஸ் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இது எச்.ஐ.வி., வைரசால் ஏற்படுகிறது. ‘சமத்துவம்’ இந்தாண்டு மையக்கருத்து. 1988ல் எய்ட்ஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. உலகலாவிய சுகாதார அச்சுறுத்தலாக எய்ட்ஸ் இருப்பதை 2030க்குள் முடிவுக்கு கொண்டு வர ஐ.நா., இலக்கு நிர்ணயித்துள்ளது. உலகில் 2021ன் படி 3.84 கோடி நோயாளிகள் உள்ளனர். 2021ல் மட்டும் 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர். 1988 முதல் இதுவரை 8.42 கோடி பேர் எய்ட்சால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement