திண்டுக்கல் மாவட்டத்தில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய கூலி தொழிலாளியை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள விளாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி கருப்பையா (24). இவர் அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியுடன் பழகி வந்துள்ளார். பின்பு சிறுமியை காதலிப்பதாக கூறி தனிமையில் சந்தித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் சிறுமி கர்ப்பமானார். இதையறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சடைந்து இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். இதை எடுத்து குழந்தை பாதுகாப்பு அதிகாரி இதுகுறித்து விளாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கருப்பையாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிறுமியை காப்பகத்தில் சேர்த்து சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.