சென்னை: மணலி அருகே ஆன்லைன் ரம்மியில் 50,000 பணத்தை இழந்த ஆட்டோ ஓட்டுநர் பார்த்திபன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது மனைவி பெயரில், மகளிர் சுய உதவிக்குழுவில் பெற்ற கடனை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்ததால் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது.