பாலக்காடு : சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்த அப்துல் ஹக்கீம் என்ற ராணுவ வீரர் வீரமரணம் அடைந்தார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள தோனி என்ற இடத்தைச் சேர்ந்த சுலைமான் — நிலாவர்னிஷா தம்பதியரின் மகன் அப்துல் ஹக்கீம் 35. சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் பணியாற்றிய இவர், நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ள சுக்மா மாவட்டம் தப்பைகொண்டா பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு நக்சல்கள் திடீர் துப்பாக்கி சூடு நடத்தியதில், அப்துல் ஹாக்கீம் படுகாயமடைந்தார். உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று அவர் சிகிச்சை பலனின்றி வீர மரணம் அடைந்தார். இவரது உடல், விமானம் மூலம் நேற்று மாலை கோவை விமான நிலையம் கொண்டுவரப்பட்டது. அங்கிருந்து அவரது வீட்டுக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது.
இன்று காலை, அப்துல் ஹக்கீமின் உடல் ராணுவ மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இவருக்கு ரம்சீனா என்ற மனைவியும், அப்ஷீன், பாத்திமா என இரு குழந்தைகளும் உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement