பிரித்தானியாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றான HSBC அடுத்த ஆண்டில் தங்களின் 114 கிளைகளை மூட இருப்பதாக உறுதி செய்துள்ளது.
மக்களின் எண்ணிக்கை 65% வரையில் சரிவு
குறைவான எண்ணிக்கையிலான மக்களே தொடர்புடைய கிளைகளை நேரிடையாக சென்று வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்வதாலையே இந்த முடிவு எனவும் HSBC நிர்வாகம் தெரிவித்துள்ளது.
@getty
மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் HSBC வங்கி கிளைகளில் நேரிடையாக சென்று பரிவர்த்தனை செய்துகொள்ளும் மக்களின் எண்ணிக்கை 65% வரையில் சரிவடைந்துள்ளதாகவும் நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பெருந்தொற்று பரவலுக்கு பின்னர், மக்கள் வங்கி கிளைகளை பரிவர்த்தனைக்காக நாடுவது சரிவடைந்துள்ளது என அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ள HSBC நிர்வாகம்,
வாரத்திற்கு 250 வாடிக்கையாளர்கள் கூட வருகை தராத கிளைகளை மூட முடிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.
இணையவழி வங்கி பரிவர்த்தனை
மேலும், சமீப ஆண்டுகளாக பிரித்தானிய மக்கள் இணையவழி வங்கி பரிவர்த்தனைக்கு பழகிக்கொண்டுள்ளனர்.
இதுபோன்ற காரணங்களால் பல கிளைகள் மூடப்படும் கட்டாயத்திற்கு தள்ளப்படுவதை தவிர்க்க முடியவில்லை என HSBC நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
@istock
மட்டுமின்றி, HSBC வங்கியை பொறுத்தமட்டில் தங்களின் வங்கி பரிவர்த்தனைகள் 97.5% அளவுக்கு இணையமூடாக நடைபெறுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்கி கிளைகளை இனி மக்கள் நாடுவார்கள் என்ற நம்பிக்கை நிர்வாகத்திற்கு இல்லை என்ற காரணத்தாலையே மூட முடிவு செய்துள்ளதாக HSBC நிர்வாகிகள் தரப்பு தெரிவித்துள்ளது.