அரச சார்பற்ற நிறுவன பிரதானிகளின் சொத்து விபரங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் அரசாங்கம் புதிய உத்தேச சட்டமொன்றை தயாரித்துள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
200இற்கும் மேற்பட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதானிகள் இலங்கையில் வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நபர்கள் தங்களது சொத்து விபரங்களை அரசாங்கத்திற்கு வெளிப்படுத்தியதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு 7இல் பாரிய வீடுகள்
சில அரச சார்பற்ற நிறுவனத் தலைவர்களுக்கு கொழும்பு 7இல் பாரிய வீடுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறானவர்கள் வருமான வரிகளையும் செலுத்துவதில்லை என சிங்கள ஊடகம் தெரிவித்துள்ளது.
சொத்து விபரங்களை கண்டறியும் சட்ட மூலத்திற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.