சென்னை: நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களையும் கைப்பற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் திமுக முனைப்புடன் உள்ளது.இதற்காக, கூட்டணியில் தற்போதுள்ள கட்சிகளுடன் மேலும் சில கட்சிகளைச் சேர்க்கவும் திமுக திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து விவாதிக்கவும், தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தவும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், முதல்வர்மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடக்கிறது.கூட்டத்தில் பங்கேற்குமாறு அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் துணை அணிகளின் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.