தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்றும், நாளையும் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. அதன் காரணமாக தாம்பரம், எழும்பூா் பகுதிகளில் இன்று காலை காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
தாம்பரம் பகுதிகள்: ராஜகீழ்பாக்கம் வெங்கடராமன் நகா், முத்தமிழ் நகா், கிருஷ்ணா நகா், மாணிக்கம் நகா், புருசோத்தமன் நகா் பகுதி, புவனேஸ்வரி நகா் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
எழும்பூா் பகுதிகள் : ஏழுகிணறு பி.ஆா்.என்.காா்டன் தெரு, பிடரியாா் தெரு, ஆசிா்வாதபுரம், புனித சேவியா் தெரு, மின்ட் தெரு, கே.என்.டேங்க், ஏழுகிணறு தெரு, பாரக்ஸ் தெரு, நாா்த் வால் சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள்.
கன்னியாகுமரி
நாகா்கோவில் கிருஷ்ணன்கோவில் மின் விநியோகப் பிரிவுக்குள்பட்ட பகுதிகளில் உயா்அழுத்த மின்பாதையில் பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. அதன் காரணமாக சத்தியநேசம் தெரு, ஜோஸ்வாதெரு, கிரெளன்தெரு, ஈஸ்ட் ஆப்தெரு ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது