திருப்பதி : திருப்பதி ரயில் நிலையத்தில் நின்றிருந்த திருமலை விரைவு ரயில் பெட்டி ஒன்றில், நேற்று திடீரென தீப்பற்றி எரிந்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் இருந்து நேற்று காலை திருப்பதி ரயில் நிலையத்துக்கு, திருமலை விரைவு ரயில் வந்து சேர்ந்தது. இதில் இருந்து பயணிகள் அனைவரும் இறங்கிச் சென்றுவிட்டனர். சிறிது நேரத்துக்குப் பின், இந்த ரயிலின் எஸ் – ௬ பெட்டியின் கழிப்பறை மேற்கூரை திடீரென தீப்பற்றி எரிந்தது. இது மள மளவென மற்ற பெட்டிகளுக்கும் பரவியது.
இதையடுத்து, அங்கிருந்த பயணியர் அலறி அடித்து ஓடினர். உடனே, ரயில்வே ஊழியர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இது குறித்து ரயில்வே போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில், பயணி ஒருவர் ரயில் பெட்டி கழிப்பறையில் சிகரெட் துண்டை அணைக்காமல் வீசிச் சென்றதே, தீ விபத்துக்கு காரணம் எனத் தெரியவந்துள்ளது.
அதிர்ஷ்டவசமாக, பயணியர் அனைவரும் இறங்கிச் சென்றுவிட்டதால், உயிர்பலி தவிர்க்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement