மாணவர்களின் பைகளில் ஆணுறைகள்,கருத்தடை சாதனங்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் ஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் கூட்டமைப்பு சார்பில் மாணவர்களின் பைகளை சோதனையிட பரிந்துரை வழங்கப்பட்டது. அதன்படி பல்வேறு பள்ளிகளில் மாணவர்களின் புத்தக பைகள் சோதனையிடப்பட்டது.
அப்படி சோதனை நடத்தியதில் ஏராளமான மாணவர்களிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி 8,9ஆம் வகுப்பு மாணவர்களின் பைகளில் இருந்து ஆணுறைகள், கருத்தடை சாதனங்கள், சிகரெட் லைட்டர்கள், சிகரெட்டுகள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சில மாணவிகளின் பைகளில் கருத்தடை சாதனங்கள் இருந்துள்ளது. தண்ணீர் பாட்டில்களில் மது கலந்து இருந்தது. அதனை தொடர்ந்து பள்ளிகளில் இது தொடர்பாக சிறப்பு பெற்றோர் ஆசிரியர் கூட்டங்கள் நடத்தப்பட்டது.
அந்த கூட்டங்களில் மாணவர்களின் பைகளில் இருந்த பொருள்கள் பெற்றோரிடம் காட்டப்பட்டு அவர்களுக்கு ஆலோசனை கூறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த சம்பவத்தின் சிக்கிய மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
newstm.in