டெல்லியில் ஜோடி லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்த நிலையில், பெண்ணை இளைஞர் 35 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆவேசமடைந்த காதலன், காதலியின் கழுத்தை நெறித்து கொலை செய்தார். பிறகு ஹாலிவுட் கிரைம் படம் பார்த்து காதலியின் உடலை 35 துண்டுகளாக வெட்டினார்.
பின்னர் கொதிக்கும் தண்ணீரில் ப்ளீச்சிங் பெளடரை போட்டு, அதில் வெட்டப்பட்ட உடல் பாகங்களை வைத்து ஊறவைத்துள்ளார். சம்பவம் வெளிவந்து நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், இளைஞர் அஃப்தாபுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் வாக்குமூலம் அனைத்தும் உண்மை என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், இந்த கொலை குறித்து போலீஸார் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் தன் காதலியைக் கொலைசெய்து பல துண்டுகளாக வெட்டியதை அஃப்தாப் ஒப்புக்கொண்டார்.
ஷ்ரத்தா தவிர டேட்டிங் ஆப் மூலம் 15 முதல் 20 பெண்களுடன் தனக்கு தொடர்பு இருந்திருப்பதையும் அஃப்தாப் ஒப்புக்கொண்டார் என்றும் கூறப்பட்டுள்ளது.
newstm.in