தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் வகையில் மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரிய காலத்தில் ஒப்புதல் அளிக்காத காரணத்தால் காலாவதியானது. ஆனால் ஆளுநர் கேட்ட விளக்கங்கள் அனைத்திற்கும் தமிழக அரசு சார்பில் கடிதம் மூலம் பதில் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆளுநரை கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு கிடையாது. அவர் தான் எங்களை கேள்வி கேட்க முடியும். ஆன்லைன் ரம்மிக்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் தாமதம் செய்ததற்கான காரணம் ஆளுநருக்கு தான் தெரியும் எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று காலை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நேரில் சந்தித்து பேசியுள்ளார்.