மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்து வந்தவர் மஞ்சிமா மோகன். இவர் தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன.
மறுபுறம் நவரச நாயகனின் மகன் கவுதம் கார்த்திக் மணிரத்தினம் இயக்கிய கடல் திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமானார். இந்தத் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக், இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஒரு மீனவனாகத் தோன்றினார். தொடர்ந்து, வை ராஜா வை, இந்திரஜித், ரங்கூன், இவன் தந்திரன் தேவராட்டம் உள்ளிட்ட சில படங்களில் நாயகனாக நடித்துள்ளார்.
இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு முத்தையா இயக்கத்தில் வெளியான தேவராட்டம் படத்தில் நடித்தபோது நடிகர் கவுதம் கார்த்திக்கிற்கும், மஞ்சிமா மோகனுக்கு இடையே காதல் மலர்ந்துள்ளது. இதையடுத்து மூன்று ஆண்டுகள் காதலித்த இந்த ஜோடிகள், கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.
அதன்படி இவர்களது திருமணம் சென்னையில் நடைபெற்றது. இவர்களின் திருமணத்தில் நடிகர்கள் ஜீவா, விக்ரம் பிரபு, ஆர்.ஜே.பாலாஜி, ஆர்.கே.சுரேஷ், நடிகை பிரியா பவானி சங்கர், இயக்குனர்கள் மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர். மேலும் இந்த ஜோடியின் வரவேற்பு நிகழ்ச்சியில் இன்னும் பல பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த புதுமணத் தம்பதியினருக்கு கேக் மற்றும் சிவப்பு ரோஜா பூங்கொத்தை அனுப்பி வைத்து தங்களின் வாழ்த்து நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தெரிவித்தனர். இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துக் கொண்டார் மஞ்சிமா. அதில், “அன்புள்ள மஞ்சிமா மற்றும் கவுதம், வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க உங்களுக்கு வாழ்த்துக்கள். அன்புடன் விக்கி மற்றும் நயன்” என எழுதப்பட்டிருந்தது.
இதனிடையே தங்களின் குறித்து சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார் நடிகை மஞ்சிமா மோகன். அதன்படி தற்போது ஷூட்டிங்கில் பிசியாக இருப்பதால் ஹனிமூன் பற்று யோசிக்கவில்லை என்றும், கிறிஸ்துமஸ் அல்லது புத்தாண்டு விடுமுறையின் போது ஹனிமூன் செல்ல வாய்ப்பு இருப்பதாகவும் மஞ்சிமா தெரிவித்துள்ளார்.