சென்னை அருகே கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரியில் செமஸ்டர் தேர்வு நடைபெற்று வருகிறது.
வழக்கம் போல் தந்தை காலையில் வேலைக்கு சென்று விட்டார். மதியம் தேர்வு என்பதால் மாணவி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் மாலையில் வேலை முடிந்து மாணவியின் தந்தை வீட்டிற்கு வந்துள்ளார்.
வீடு உள்பக்கமாக பூட்டி இருந்ததால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சியைடந்தனர். பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று மாணவியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றனர்.
அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இச்சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் பெரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பெரும்பாக்கம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in