நீலகிரி மாவட்டம் கூடலூர் நகராட்சி 18 வது வார்டு திமுக கவுன்சிலராக இருப்பவர் சத்தியசீலன். இவர் வீடு கட்ட அனுமதிக்க ஐம்பதாயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. சம்பந்தப்பட்ட திமுக கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தப்பட்டது.
இது குறித்து விளக்கம் அளித்த திமுக கவுன்சிலர் சத்தியசீலன் ஆறு மாதத்திற்கு முன்பு எடுக்கப்பட்ட வீடியோ என்றும் அப்பொழுது நகரமன்ற தலைவராக உள்ள திமுகவை சேர்ந்த பரிமளா என்னை அழைத்து ஒப்பந்ததாரர் ஒருவரிடம் ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தை வாங்கி வந்து தருமாறு கேட்டுக் கொண்டார்.
அவர் சொன்னது போலவே பணத்தைப் பெற்று வந்து தலைவர் பரிமிளாவிடம் கொடுத்து விட்டேன். சமீபத்தில் தலைவர் பரிமளா ஒப்பந்ததாரர்களிடம் 7.2 லட்சம் ரூபாய் கமிஷன் பெற்றது பற்றி நகர மன்ற கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர் முன்னிலையில் கேட்டேன். இந்த விவகாரத்தை திசை திருப்ப ஆறு மாதத்திற்கு முன்பு எடுத்த வீடியோவை தற்போது வெளியிட்டுள்ளார் என விளக்கம் அளித்துள்ளார்.
கவுன்சிலர் சத்தியசீலனின் குற்றச்சாட்டை மறுத்துள்ள நகர மன்ற தலைவர் பரிமளா கவுன்சிலர் தன் மீது பொய் குற்றச்சாட்டை முன் வைக்கிறார். என் மீது அவதூறு பரப்பும் கவுன்சிலர் மீது உரிய இடத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுப்பேன் என கூறியுள்ளார். ஆளுங்கட்சியை சேர்ந்த கவுன்சிலரும் நகர மன்ற தலைவரும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு முன்வைப்பது திமுகவினர் இடையே பெரும் சலப்பை உண்டாக்கியுள்ளது.