பெண்டகன்: உலகின் முதல் ஆறாவது தலைமுறை அணுசக்தி குண்டுவீச்சு B-21 ரைடர் போர் விமானத்தை அமெரிக்கா வெளியிட்டது. 30 ஆண்டுகளில் இந்த நவீன வசதி கொண்ட ரைடரின் அணியைஉருவாக்கவும், வாங்கவும் இயக்கவும் 203 பில்லியன் அமெரிக்க டாலர் அளவு செலவாகும் என்று ப்ளூம்பெர்க் மதிப்பிட்டுள்ளது. இந்த வகை குண்டுவீச்சு ரைடர்களில் குறைந்தபட்சம் 100 விமானங்களை வாங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
போர் விமானத்தின் பெரும்பாலான அம்சங்கள் ரகசியமாகவே உள்ளன. இது ஒரு ஆளில்லாத விமானமாக இருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. உலகின் நவீன மற்றும் முதல் ஆறாவது தலைமுறை அணுசக்தி ரைடர் விமானம் பற்றி அமெரிக்க விமானப்படை செய்தித் தொடர்பாளர் கூறுவது என்ன தெரியுமா? “விமானம் பணியாளர்கள் இல்லாமல் பறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, ஆனால் அதற்கான சாத்தியக்கூறுகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது”.
உலகின் முதல் ஆறாவது தலைமுறை போர் விமானம்
அமெரிக்க விமானப்படை உலகின் முதல் ஆறாவது தலைமுறை அணுசக்தி குண்டுவீச்சு போர் விமானம் B-21 ரைடர், 9,600-கிலோமீட்டர் தூரம் வரை குண்டு வீசக்கூடியது. தோராயமாக 10-டன் பேலோடைக் கொண்டுள்ளது. இந்த விமானம், கலிபோர்னியாவின் பால்ம்டேலில் உள்ள நார்த்ரோப் க்ரம்மன் தயாரிப்புத் தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
மேலும் படிக்க | Delhi MCD Elections 2022: டெல்லி உள்ளாட்சி தேர்தல் கெஜ்ரிவால் போட்ட திடீர் ட்வீட்!
B-21 ரைடர் ஒரு சப்சோனிக் விமானமாக உருவாக்கப்பட்டதாக அறியப்படுகிறது.”புத்திசாலித்தனம் மற்றும் கண்டுபிடிப்புகளில் அமெரிக்காவின் நீடித்த நன்மைகளுக்கு இது ஒரு சான்று” என்று வெளியீட்டு விழாவில், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார். அமெரிக்க விமானப்படை குறைந்தது 100 விமானங்களையாவது வாங்க திட்டமிட்டுள்ளது.
எதிரியின் ரேடாரை எளிதில் ஏமாற்றிவிட்டலாம்
B-21 ஆனது பிற ரேடார்களின் வலைக்குள் சிக்காத அளவு தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. விமானம் “ஓபன் சிஸ்டம் ஆர்க்கிடெக்சருடன்” கட்டப்பட்டுள்ளது, இது “இதுவரை கண்டுபிடிக்கப்படாத புதிய ஆயுதங்களை” இணைக்க அனுமதிக்கிறது என்று ஆஸ்டின் கூறினார். இந்த போர் விமானங்கள் கொண்ட விமானப் பிரிவை உருவாக்க 203 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
பென்டகன் தனது அணுசக்தி முக்கூட்டின் மூன்று பகுதிகளையும் நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, இதில் சிலோ-ஏவப்பட்ட அணுசக்தி பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்பட்ட போர்க்கப்பல்கள் ஆகியவையும் அடங்கும், இது சமீபத்திய தசாப்தங்களில் பயங்கரவாத எதிர்ப்பு என்ற நிலையில் இருந்து மாறி சீனாவின் விரைவான இராணுவ நவீனமயமாக்கலைச் சந்திக்கிறது என்று அசோசியேடட் பிரஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
முக்கிய அமெரிக்க தளங்களில், சீனாவின் எல்லையை குறிவைப்பதில் அமெரிக்கா ஆர்வமாக உள்ளது. பெய்ஜிங்கிடம் DF-16, DF-17, DF-21, DF-21D மற்றும் DF-26 ஏவுகணைகள் உள்ளன, அவை பசிபிக் பகுதியில் உள்ள எந்த அமெரிக்கத் தளத்தையும் தாக்கும் திறன் கொண்டவை.
ஏர் அண்ட் ஸ்பேஸ் ஃபோர்சஸ் இதழுக்கு அளித்த அறிக்கையில், நார்த்ரோப் க்ரம்மன் இந்த B-21ரைடர் பற்றி இவ்வாறு கூறுகிறார். “உளவுத்துறை, கண்காணிப்பு மற்றும் உளவு, மின்னணு தாக்குதல் மற்றும் பல டொமைன் நெட்வொர்க்கிங் திறன்களை வழங்கும் ஒரு பெரிய அமைப்புகளின் முன்னணி அங்கமாக இந்த ரைடர் வடிவமைக்கப்பட்டுள்ளது”.
மேலும் படிக்க | Gujarat Assembly Election 2022: குஜராத் சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த பிரதமர் மோடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ