புதுடில்லி: பல்வேறு சவால்கள் இருந்தாலும், உலகின் பல நாடுகளுக்கு இந்தியா முன் மாதிரியாக திகழ்கிறது என ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னாலெனா புகழாரம் சூட்டியுள்ளார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான மாற்றம் மற்றும் ரஷ்யா மற்றும் சீனாவுடனான இந்தியாவின் உறவு குறித்து விவாதிக்க ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னாலெனா இன்று (டிச.,05) இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள சில தினங்களுக்கு முன் முடிவு செய்தார்.
இந்நிலையில், இவர் இன்று(டிச.,05) டில்லி வந்தடைந்தார். இதையடுத்து, டில்லியில் உள்ள காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
முன்னதாக ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் கூறுகையில், இந்திய பயணத்தின்போது தற்போதைய சூழலில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் காலநிலை நெருக்கடி மற்றும் சர்வதேச ஒழுங்கைப் பராமரித்தல் ஆகியவை குறித்து முக்கிய பேச்சுவார்த்தை நடைபெறும்.
வளர்ந்து வரும் பொருளாதார சக்தியாகவும், உறுதியான ஜனநாயக நாடாக இந்தியா விளங்குகிறது. பல்வேறு சவால்கள் இருந்தாலும், உலகின் பல நாடுகளுக்கு இந்தியா முன் மாதிரியாக திகழ்கிறது.
உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்புப் போருக்கு எதிராக ஜி20 உள்ளது. இந்தியா- ஜெர்மனியின் கூட்டணி நாடாக உள்ளது. இந்தியாவிற்கு மிக்க நன்றி. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு மற்றும் அதன் பின்விளைவுகளுக்கு மேலதிகமாக, சீனாவுடனான இந்தியாவின் உறவுகள் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன், அன்னாலெனா சந்தித்து ஆலோசனை மேற்கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement