புதுடில்லி: தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று (டிச.,05) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:
தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. தொடர்ந்து, காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வங்கக் கடலில் டிச.8ம் தேதி புயலாக உருவாக வாய்ப்புள்ளது. புயலாக உருமாறும்பட்சத்தில் அதற்கு ‘மாண்டஸ்’ என பெயரிடப்படும்.
இதனால் கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் காரைக்காலில் ஒரு சில பகுதிகளில் இன்று( டிச.,05) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி; நாகை மாவட்டத்தில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை; மீன் பிடிக்க சென்ற படகுகளும் தகவல் தெரிவித்து கரை திரும்ப வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement