கத்தார் உலகக் கோப்பை தொடரில் இருந்து ஜேர்மனி அணி சீக்கிரம் வெளியேற காரணம் வீரர்களின் மனைவிகள் தான் அந்நாட்டின் பிரபல பத்திரிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது.
ஜேர்மனி வெளியேற்றம்
கத்தாரில் நடைபெற்று வரும் கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் பலம் வாய்ந்த அணியான ஜேர்மனி நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறியது.
இந்த நிலையில் ஜேர்மனியர்கள் நாக் அவுட் நிலைக்கு முன்னேறத் தவறினர், ஏனெனில் வீரர்களின் மனைவிகள் மற்றும் காதலிகள் போதுமான அளவு பார்ட்டி மற்றும் கொண்டாட்டத்தில் ஈடுபடவில்லை என்று ஒரு ஜேர்மன் பத்திரிக்கை பில்ட் தெரிவித்துள்ளது.
Tom Weller/picture alliance via Getty Images
விமர்சித்த பத்திரிக்கை
ஏன் உங்களுக்கு தாகமாக இல்லையா? நடனம் ஆட முடியவில்லையா?
இப்போது மகிழ்ச்சியாக சொந்த நாட்டுக்கு திரும்புகிறீர்கள்! ஆனால் இப்படியே இருக்க முடியாது என விமர்சித்துள்ளது.
ஜேர்மன் வீரர்கள் கோஸ்டாரிகாவிற்கு எதிரான உலகக் கோப்பை குழுநிலை ஆட்டத்திற்குத் தயாராகும் முன், கத்தார் தலைநகருக்கு வெளியே உள்ள ஒரு ஆடம்பரமான ஹொட்டல் ரிசார்ட்டில் தங்கள் மனைவி, காதலிகளுடன் இரண்டு இரவுகளைக் கழித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Jean Catuffe/Getty Images